சங்கீதம் 126 - பரிசுத்த பைபிள்ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல். 1 கர்த்தர் நம்மை மீண்டும் விடுவிக்கும்போது அது ஒரு கனவைப் போன்றிருக்கும். 2 நாம் சிரித்துக்கொண்டும் மகிழ்ச்சியுடன் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருப்போம்! பிற தேசத்து ஜனங்கள், “இஸ்ரவேலின் ஜனங்களுக்கு கர்த்தர் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்!” என்பார்கள். 3 ஆம், கர்த்தர் அந்த அற்புதமான காரியத்தை நமக்குச் செய்ததால் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். 4 கர்த்தாவே, பாலைவன நீரூற்றுக்கள் மீண்டும் ஓடிவரும் வெள்ளத்தின் தண்ணீரால் நிரம்புவதைப்போல எங்களை மீண்டும் விடுவியும். 5 ஒருவன் விதைகளை விதைக்கும்போது துக்கமாயிருக்கலாம். ஆனால் அவன் பயிர்களின் பலனை அறுவடை செய்யும்போது மகிழ்ச்சியோடிருப்பான். 6 அவன் விதைகளை வயலுக்கு எடுத்துச் செல்லும்போது அழக்கூடும், ஆனால் அறுவடையைக் கொண்டுவரும்போது அவன் மகிழ்ச்சியோடிருப்பான். |
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International
Bible League International