சங்கீதம் 125 - பரிசுத்த பைபிள்ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல். 1 கர்த்தருக்குள் நம்பிக்கை வைக்கிறவர்கள் சீயோன் மலையைப் போன்றிருப்பார்கள். அவர்கள் அசைக்கப்படுவதில்லை. அவர்கள் என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்கள். 2 எருசலேமைச் சுற்றிலும் மலைகள் உள்ளது போல, கர்த்தர் அவரது ஜனங்களைச் சுற்றிலும் இருக்கிறார். என்றென்றைக்கும் எப்போதும் அவர் தமது ஜனங்களைக் காப்பார். 3 நல்ல ஜனங்களின் நாட்டைக் கொடிய ஜனங்கள் நிரந்தரமாக ஆளப்போவதில்லை. அவ்வாறு நிகழ்ந்தால் நல்லோரும் கூட தீய காரியங்களைச் செய்ய ஆரம்பிப்பார்கள். 4 கர்த்தாவே, நல்லோருக்கு நல்லவராக இரும். பரிசுத்த இருதயம் உள்ளோரிடம் நல்லவராக இரும். 5 கொடிய ஜனங்கள் தவறான காரியங்களைச் செய்கிறார்கள். அக்கொடியோரை கர்த்தர் தண்டிப்பார். இஸ்ரவேலில் சமாதானம் நிலவட்டும்! |
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International
Bible League International