சங்கீதம் 122 - பரிசுத்த பைபிள்ஆலயத்திற்குப் போகும்போது பாடும்படி தாவீது அளித்த பாடல். 1 ஜனங்கள், “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம்” என்று கூறியபோது நான் மிகவும் மகிழ்ந்தேன். 2 இதோ, நாங்கள் எருசலேமின் வாசல்கள் அருகே நின்றுகொண்டிருக்கிறோம். 3 இது புதிய எருசலேம். ஒரே நகரமாக இது மீண்டும் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. 4 இங்கே இஸ்ரவேலின் கோத்திரங்கள் போவதுண்டு. கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பதற்கு இஸ்ரவேல் ஜனங்கள் அங்கே செல்வார்கள். அவை கர்த்தருக்குரிய கோத்திரங்கள் ஆகும். 5 அங்கு ராஜாக்கள் ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்குத் தங்கள் சிங்காசனங்களை நிறுவினார்கள். தாவீதின் குடும்பத்து ராஜாக்கள் அங்குத் தங்கள் சிங்காசனங்களை அமைத்தார்கள். 6 எருசலேமின் சமானத்திற்காக ஜெபம் செய்யுங்கள். “உம்மை நேசிக்கும் ஜனங்கள் அங்கு சமாதானத்தைக் காண்பார்கள் என நான் நம்புகிறேன். 7 உங்கள் வீடுகளின் உள்ளே சமாதானம் நிலவும் என நான் நம்புகிறேன். உங்கள் பெரிய கட்டிடங்களில் பாதுகாப்பு இருக்கும் என நான் நம்புகிறேன்.” 8 என் சகோதரர்கள், சுற்றத்தினர் ஆகியோரின் நன்மைக்காக, இங்கு சமாதானம் நிலவவேண்டுமென நான் ஜெபிக்கிறேன். 9 நமது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தின் நன்மைக்காக, இந்நகரில் நன்மைகள் நிகழ வேண்டுமென நான் ஜெபம் செய்கிறேன். |
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International
Bible League International