சங்கீதம் 121 - பரிசுத்த பைபிள்ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல். 1 நான் மலைகளுக்கு நேராகப் பார்க்கிறேன். ஆனால் எனக்கு உதவி உண்மையாகவே எங்கிருந்து வரப்போகிறது? 2 எனக்கு உதவி பரலோகத்தையும் பூமியையும் படைத்த கர்த்தரிடமிருந்து வரும். 3 தேவன் உன்னை விழவிடமாட்டார். உன்னைப் பாதுகாப்பவர் தூங்கமாட்டார். 4 இஸ்ரவேலின் பாதுகாவலர் தூங்குவதில்லை. தேவன் ஒருபோதும் உறங்கார். 5 கர்த்தர் உன் பாதுகாவலர். அவரது மிகுந்த வல்லமையால் உன்னைப் பாதுகாக்கிறார். 6 பகல் வேளையில் சூரியன் உன்னைத் துன்புறுத்தாது. இரவில் சந்திரன் உன்னைத் துன்புறுத்தாது. 7 எல்லா ஆபத்துக்களிலிருந்தும் கர்த்தர் உன்னைக் காப்பாற்றுவார். கர்த்தர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார். 8 நீ வரும்போதும் போகும்போதும் கர்த்தர் உனக்கு உதவுவார். இப்போதும் என்றென்றும் கர்த்தர் உனக்கு உதவுவார். |
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International
Bible League International