சங்கீதம் 3 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்சங்கீதம் 3 தன் மகனாகிய அப்சலோமிடமிருந்து தப்பிச் சென்றபோது தாவீது பாடிய பாடல். 1 யெகோவாவே, என்னுடைய எதிரிகள் எவ்வளவாகப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் அநேகர். 2 தேவனிடத்தில் அவனுக்கு சகாயம் இல்லை என்று, என்னுடைய ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராக இருக்கிறார்கள். (சேலா) 3 ஆனாலும் யெகோவாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும், என்னுடைய மகிமையும், என்னுடைய தலையை உயர்த்துகிறவருமாக இருக்கிறீர். 4 நான் யெகோவா வை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்கு பதில் கொடுத்தார். (சேலா) 5 நான் படுத்து தூங்கினேன்; விழித்துக்கொண்டேன்; யெகோவா என்னைத் தாங்குகிறார். 6 எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற பத்தாயிரம்பேருக்கும் நான் பயப்படமாட்டேன். 7 யெகோவாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை காப்பாற்றும். நீர் என்னுடைய பகைவர்கள் எல்லோரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கர்களுடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர். 8 ஜெயம் யெகோவாவுடையது; தேவனே உம்முடைய ஆசீர்வாதம் உம்முடைய மக்களின்மேல் இருப்பதாக (சேலா). |
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Bridge Connectivity Solutions Pvt. Ltd.