சங்கீதம் 149 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்சங்கீதம் 149 1 அல்லேலூயா, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி வெளிப்படட்டும். 2 இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், மகன்களாகிய சீயோன் தங்களுடைய ராஜாவில் சந்தோஷப்படட்டும். 3 அவருடைய பெயரை நடனத்தோடு துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரை புகழ்ந்துபாட வேண்டும். 4 யெகோவா தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார். 5 பரிசுத்தவான்கள் மகிமையோடு சந்தோஷப்பட்டு, தங்களுடைய படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள். 6 தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும், 7 அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், அவர்களுடைய மேன்மக்களை இரும்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்மேல் செலுத்தவும், 8 அவர்களுடைய வாயில் யெகோவாவை உயர்த்தும் துதியும், அவர்களுடைய கையில் இருபுறமும் கூர்மையுள்ள வாளும் இருக்கும். 9 இந்த மரியாதை அவருடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும் உண்டாகும். அல்லேலூயா. |
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Bridge Connectivity Solutions Pvt. Ltd.