சங்கீதம் 125 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்சங்கீதம் 125 1 யெகோவாவை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் மலையைப்போல் இருப்பார்கள். 2 மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருக்கிறதுபோல், யெகோவா இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய மக்களைச் சுற்றிலும் இருக்கிறார். 3 நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்களுடைய கைகளை நீட்டாதபடிக்கு, துன்மார்க்கத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சொத்தின்மேல் நிலைத்திருக்காது. 4 யெகோவாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மை செய்யும். 5 தங்களுடைய கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் யெகோவா அக்கிரமக்காரர்களோடு போகச்செய்வார். இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு. |
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Bridge Connectivity Solutions Pvt. Ltd.