எரேமியா 45 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்அத்தியாயம் 45 பாருக் என்பவனுக்குச் செய்தி 1 யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் அரசாட்சியின் நான்காம் வருடத்தில் நேரியாவின் மகனாகிய பாருக் இந்த வசனங்களை எரேமியாவின் வாய் சொல்ல ஒரு புத்தகத்தில் எழுதும்போது, எரேமியா தீர்க்கதரிசி அவனிடத்தில் பேசி, 2 பாருக்கே, உன்னைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், 3 நீ: இப்பொழுது எனக்கு ஐயோ, யெகோவா என் வியாதியை சஞ்சலத்தால் பெருகச்செய்தார், என் தவிப்பினால் இளைத்தேன், இளைப்பாறுதலைக் காணாதேபோனேன் என்று சொன்னாய் என்கிறார். 4 இதோ, நான் கட்டினதையே நான் இடிக்கிறேன்; நான் நாட்டினதையே நான் பிடுங்குகிறேன்; இந்த முழு தேசத்திற்கும் இப்படியே நடக்கும். 5 நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே; இதோ, மாம்சமான அனைவர்மேலும் தீங்கை வரச்செய்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்; ஆனாலும், நீ போகும் எல்லா இடங்களிலும் உன் உயிரை உனக்குக் கிடைக்கும் கொள்ளைப்பொருளாகத் தருகிறேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்று அவனுடன் சொல் என்றார். |
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Bridge Connectivity Solutions Pvt. Ltd.