ரோமர் 4:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 ஆபிரகாம் உலகத்தை உரிமைச் சொத்தாக பெறுவார் என்ற வாக்குறுதியை அவரும் அவரது சந்ததியும் நீதிச்சட்டத்தின் மூலமாகப் பெற்றுக்கொள்ளவில்லை, விசுவாசத்தினால் வரும் நீதியின் மூலமாகவே பெற்றுக்கொண்டனர். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கோ அல்லது அவன் வம்சத்திற்கோ நியாயப்பிரமாணத்தினால் கிடைக்காமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 உலகத்தின் உரிமையாளனாயிருப்பான் என்ற வாக்குத்தத்தத்தை இறைவன் அவனுக்கும், அவன் சந்ததிகளுக்கும் கொடுத்தார். இந்த வாக்குத்தத்தம் மோசேயின் சட்டத்தினால் அல்ல, விசுவாசத்தினால் வரும் நீதியினால் கொடுக்கப்பட்டது. Ver Capítuloபரிசுத்த பைபிள்13 ஆபிரகாமுக்கும் அவனது சந்ததியினருக்கும் முழு உலகமும் கிட்டும் என்ற தேவனுடைய வாக்குறுதி கிடைத்தது. ஆபிரகாம் சட்டவிதிகளைக் கடைப்பிடித்ததால் அவனுக்கு அவ்வாக்குறுதி கிடைக்கவில்லை. அவன் தனது விசுவாசத்தால் தேவனுக்கு முன் நீதிமானாக இருந்தபடியால் இது கிடைத்தது. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்காவது அவன் சந்ததிக்காவது நியாயப்பிரமாணத்தினால் கிடையாமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது. Ver Capítulo |