ரோமர் 1:21 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 அவர்கள் இறைவனை அறிந்திருந்த போதிலும் அவரை இறைவன் என்று மகிமைப்படுத்தவோ, அவருக்கு நன்றி செலுத்தவோ இல்லை. இதனால் அவர்களது சிந்தனையில் பயனற்ற வாதங்கள் தோன்றி அவர்களது மந்தமான இருதயங்கள் உணர்வற்று இருளால் நிறைந்தன. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 அவர்கள் தேவனைத் தெரிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், நன்றி சொல்லாமலும் இருந்து, தங்களுடைய சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்ச்சி இல்லாத அவர்களுடைய இருதயம் இருள் அடைந்தது. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 அவர்கள் இறைவனை அறிந்தும்கூட, அவரை இறைவனாக மகிமைப்படுத்தவில்லை, அவருக்கு நன்றி செலுத்தவும் இல்லை. மாறாக அவர்களுடைய சிந்தனை பயனற்றதாகி, அவர்களுடைய உணர்வற்ற இருதயங்கள் இருளடைந்தன. Ver Capítuloபரிசுத்த பைபிள்21 தேவனைப் பற்றி மக்களுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவதில்லை; அவருக்கு நன்றி சொல்வதும் இல்லை. மக்கள் எண்ணங்களில் பயனற்றுப் போயினர். அவர்களின் அறிவீனமான நினைவுகளில் இருள் நிறைந்திருக்கிறது. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. Ver Capítulo |