எபேசியர் 4:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 அவர்களுடைய பிடிவாதமான இருதயத்தின் காரணமாக அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள அறிவீனத்தினால், அவர்களது சிந்தை புரிந்துகொள்ளும் தன்மை அற்றுப்போய் இருள் அடைந்துள்ளது. அவர்கள் இறைவன் தரும் வாழ்விலிருந்து தூர விலகி இருக்கின்றார்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 அவர்கள் புத்தியில் இருள் அடைந்து, தங்களுடைய இருதயக் கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவன் தரும் ஜீவனுக்கு அந்நியர்களாக இருந்து; Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 அவர்கள் விளங்கிக்கொள்வதில் மந்தமுள்ளவர்களாயும், இறைவனின் வாழ்விலிருந்து பிரிக்கப்பட்டவர்களாயும் வாழ்கிறார்கள்; இது அவர்களுடைய இருதயக்கடினத்தினால் ஏற்பட்ட அறிவீனத்தினால் நடக்கிறது. Ver Capítuloபரிசுத்த பைபிள்18 அந்த மக்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்களின் மனம் மூடியது, இதயம் கடினமானது, அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. எனவே தேவன் கொடுக்கிற வாழ்க்கை அவர்களுக்கு இல்லை. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதயக்கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து; Ver Capítulo |