எபேசியர் 4:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 அப்போது, நாம் தொடர்ந்தும் குழந்தைகளைப் போல் இருக்க மாட்டோம். அலைகளினால் அங்கும் இங்கும் அடித்துச் செல்லப்படுவது போல், வெவ்வேறு போதனைகளாகிய காற்றினாலோ, மனிதரின் தந்திரமும் கபடமும் உள்ள ஏமாற்றும் சூழ்ச்சியினாலோ அலைக்கழிக்கப்பட மாட்டோம். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 நாம் இனிக் குழந்தைகளைப்போல இல்லாமல், மனிதர்களுடைய வஞ்சகமான தந்திரமுள்ள போதனையாகிய பலவிதமான காற்றினாலே, அலைகளினால் அடிபட்டு அலைகிறவர்களாக இல்லாமல், Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 அப்பொழுது நாம் தொடர்ந்து குழந்தைத்தனமுள்ளவர்களாய் இருக்கமாட்டோம். காற்றினாலும் அலைகளினாலும் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படுவதுபோல், மனிதரின் வெவ்வேறு புதுப்புது போதனைகளினால், நாமும் அலைக்கழிக்கப்படமாட்டோம். மனிதரின் தந்திரமும் கபடமுமுள்ள ஏமாற்றும் சூழ்ச்சியில் இழுபடவுமாட்டோம். Ver Capítuloபரிசுத்த பைபிள்14 நாம் இன்னும் குழந்தைகள் போல் இருப்பதை நிறுத்த வேண்டும். அலைகளால் அலைக்கழிக்கப்படும் கப்பலைப்போல சிலர் அடிக்கடி மனம் மாறிக்கொண்டிருக்கிறார்கள். நாம் அவர்களைப் போன்று இருப்பதையும் நிறுத்த வேண்டும். நம்மைத் தந்திரமாகச் சிக்கவைக்க சிலர் முயலும்போது நாம் அவர்கள் பின்னால் போகக் கூடாது. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், Ver Capítulo |