கொலோசேயர் 2:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 எவரும் உங்களை தங்கள் வெறுமையான ஏமாற்றுப் பேச்சுக்களிலும் மனித தத்துவ ஞானங்களிலும் சிக்க வைத்து கட்டுப்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இவை மனித பாரம்பரியத்திலும், உலகைக் கட்டுப்படுத்தும் ஆவிக்குரிய சக்திகளிலும் தங்கியுள்ளனவே அன்றி, கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 உலக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அது மனிதர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப்பற்றினதல்ல. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 தங்களுடைய வெறுமையான, ஏமாற்றும் தத்துவ ஞானத்தினால், ஒருவனும் உங்களை சிக்கவைக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். இவை மனித பாரம்பரியத்திலும், உலக அடிப்படைக் கொள்கையிலுமே தங்கியிருக்கின்றன. இவை கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்டவையல்ல. Ver Capítuloபரிசுத்த பைபிள்8 பொய்யான எண்ணங்களாலும், பொருளற்ற சொற்களாலும் எவரும் உங்களை வழி நடத்திச் செல்லாதபடி உறுதியாய் இருங்கள். இத்தகைய எண்ணங்கள் கிறிஸ்துவிடமிருந்து வராது. மக்களிடமிருந்தே வருகிறது. இவை உலக மக்களின் பயனற்ற எண்ணங்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப்பற்றினதல்ல. Ver Capítulo |