La Biblia Online

- Anuncios -




அப்போஸ்தலர் 9:36 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

36 யோப்பாவிலே இருந்த சீடர்களில் தபீத்தா என்னும் பெயருடைய ஒரு சிஷ்யை இருந்தாள். கிரேக்க மொழியிலே அவளை தொர்க்காள் என்று அழைத்தார்கள். அவள் எப்போதும் நன்மை செய்கின்றவளாயும், ஏழைகளுக்கு உதவி செய்கின்றவளாயும் இருந்தாள்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

36 யோப்பா பட்டணத்தில் உள்ள சீடர்களில், கிரேக்கு மொழியிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பெயருடைய ஒரு பெண் இருந்தாள்; அவள் நல்லகாரியங்களையும் தருமங்களையும் மிகுதியாகச் செய்துகொண்டுவந்தாள்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

36 யோப்பாவிலே தபீத்தா என்னும் பெயருடைய சீஷி ஒருத்தி இருந்தாள். கிரேக்க மொழியிலே அவளைத் தொற்காள் என்று அழைத்தார்கள். அவள் எப்பொழுதும் நன்மை செய்கிறவளாயும், ஏழைகளுக்கு உதவி செய்கிறவளாயும் இருந்தாள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

36 யோப்பா நகரில் தபித்தா என்னும் பெயருள்ள இயேசுவின் சீஷப் பெண் இருந்தாள். (அவளது கிரேக்க பெயரான, தொர்காள், “மான்” எனப் பொருள்பட்டது) அவள் மக்களுக்கு எப்போதும் நன்மையையே செய்தாள். தேவைப்பட்ட மக்களுக்குப் பண உதவியும் செய்து வந்தாள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

36 யோப்பா பட்டணத்தில் கிரேக்குப் பாஷையிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பேருடைய ஒரு சீஷி இருந்தாள்; அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள்.

Ver Capítulo Copiar




அப்போஸ்தலர் 9:36

Síguenos en:

Anuncios


Anuncios