அப்போஸ்தலர் 15:20 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 ஆயினும், அவர்கள் விக்கிரகங்களினால் கறைப்பட்ட உணவிலிருந்தும், பாலியல் ஒழுக்கக்கேட்டிலிருந்தும் மற்றும் இரத்தம் சிந்தப்படாமல் நெரித்துக் கொல்லப்பட்ட மிருகங்களைச் சாப்பிடுவதிலிருந்தும், இரத்தத்தைச் சாப்பிடுவதிலிருந்தும் தங்களை விலக்கிக்கொள்ள வேண்டும். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 விக்கிரகங்களுக்குப் படைத்த அசுத்தமானவைகளை சாப்பிடாமலும், தகாத உறவு கொள்ளாமலும், கழுத்தை நசுக்கிக் கொல்லப்பட்ட மிருகம் மற்றும் இரத்தம் ஆகியவற்றை சாப்பிடாமலும் இருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 ஆயினும், அவர்கள் இறைவன் அல்லாதவைகளினால் கறைப்பட்ட உணவைத் தவிர்க்கவேண்டும் என்றும், முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடக்கூடாது என்றும், நெரித்துக் கொல்லப்பட்ட மிருகத்தின் இறைச்சியைச் சாப்பிடக்கூடாது என்றும், இரத்தத்தை சாப்பிடக்கூடாது என்றும் நாம் எழுதி அறிவிக்கவேண்டும். Ver Capítuloபரிசுத்த பைபிள்20 ஆனால் ஒரு கடிதத்தை நாம் அவர்களுக்கு எழுதவேண்டும். அதில்: ‘விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணாதீர்கள். பாலியல் பாவங்களில் ஈடுபடாதீர்கள். இரத்தத்தை ருசிக்காதீர்கள். நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களை உண்ணாதீர்கள் என்று எழுதுவோம்.’ Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன். Ver Capítulo |