ரோமர் 9:33 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202233 இதைப்பற்றி எழுதப்பட்டுள்ளபடியே நடந்தது: “இதோ, நான் மனிதர்களை இடறச்செய்யும் கல்லையும், அவர்களை வீழ்த்தும் கற்பாறையையும் சீயோனிலே வைக்கிறேன்; ஆனால் அவரில் விசுவாசம் கொண்டிருக்கிற எவரும் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போகமாட்டார்கள்.” Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்33 “இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுகிறதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடம் விசுவாசமாக இருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை” என்று எழுதியிருக்கிறபடி நடந்தது. Ver Capítuloபரிசுத்த பைபிள்33 அந்தக் கல்லைப் பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது. “பாருங்கள்! நான் கல்லை சீயோனில் வைத்திருக்கிறேன். அது மக்களைத் தடுக்கி விழச் செய்யும். அந்தப் பாறை மக்களைத் தடுமாறி விழ அனுமதிக்கும். ஆனால் அக்கல்லிடம் நம்பிக்கைக்கொண்ட எவனும் அவமானம் அடைவதில்லை.” Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு33 இதைப்பற்றியே இப்படி எழுதப்பட்டுள்ளது: “இதோ நான் சீயோனிலே இடறுவதற்கான ஒரு கல்லையும் தவறுவதற்கான ஒரு கற்பாறையையும் வைக்கிறேன். அவரில் விசுவாசம் வைக்கிற எவரும் வெட்கத்துக்குள்ளாவதில்லை.” Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)33 இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று. Ver Capítulo |