வெளிப்படுத்தல் 1:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 “இதோ பாருங்கள், இயேசு மேகங்கள் மீது வருகிறார்” மற்றும் “எல்லா கண்களும் அவரைக்காணும், அவரைக் குத்தியவர்களும் அவரை நோக்கிப் பார்ப்பார்கள்”; பூமியிலுள்ள எல்லா மக்களும், “அவர் நிமித்தம் புலம்புவார்கள்.” அது அப்படியே ஆகட்டும்! ஆமென். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 இதோ, மேகங்களோடு வருகிறார்; கண்கள் எல்லாம் அவரைப் பார்க்கும், அவரைக் குத்தினவர்களும் அவரைப் பார்ப்பார்கள்; பூமியில் உள்ள கோத்திரத்தார்கள் எல்லோரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே நடக்கும், ஆமென். Ver Capítuloபரிசுத்த பைபிள்7 பாருங்கள், இயேசு மேகங்களுடனே வருகிறார். ஒவ்வொருவரும் அவரைக் காண்பார்கள். அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள். பூமியில் உள்ள அனைத்து மக்களும் அவரைப் பார்த்து, அவருக்காகப் புலம்புவார்கள். ஆமாம், அது அப்படியே நடக்கும். ஆமென். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 “இதோ, இயேசு மேகங்கள் மீது வருகின்றார்” அத்துடன், “எல்லாக் கண்களும் அவரைக் காணும், அவரைக் குத்தியவர்களும் அவரை நோக்கிப் பார்ப்பார்கள்;” பூமியிலுள்ள எல்லா மக்களும், “அவர் பொருட்டு புலம்புவார்கள்.” அது அப்படியே ஆகட்டும்! ஆமென். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென். Ver Capítulo |