La Biblia Online

- Anuncios -




பிலிப்பியர் 3:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

12 இவை எல்லாவற்றையும் நான் ஏற்கெனவே பெற்றுவிட்டேன் என்றோ, ஏற்கெனவே முழுமை நிலையை அடைந்துவிட்டேன் என்றோ நான் கூறவில்லை. ஆனால் கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கத்தை நிறைவேற்றவேண்டும் என்றே தொடர்ந்து கடும் முயற்சிசெய்கிறேன்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 நான் பெற்றுக்கொண்டேன் அல்லது முழுவதும் தேறினவனானேன் என்று நினைக்காமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்வதற்காக ஆசையாகத் தொடருகிறேன்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

12 நான் எப்படி இருக்க வேண்டுமென தேவன் விரும்புகிறாரோ அப்படி நான் ஏற்கெனவே இருக்கிறேன் என்று எண்ணவில்லை. நான் இன்று வரை கூட எனக்காக கிறிஸ்துவால் ஆக்கப்பட்ட அந்த குறிக்கோளை அடையவில்லை. ஆனால் தொடர்ந்து அந்தக் குறிக்கோளை அடைவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

Ver Capítulo Copiar

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

12 இவை எல்லாவற்றையும் நான் ஏற்கெனவே பெற்றுவிட்டேன் என்றோ, ஏற்கெனவே முழுமை நிலை அடைந்துவிட்டேன் என்றோ சொல்லவில்லை. மாறாக, கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கத்தை அடைவதற்காகத் தொடர்ந்து கடும் முயற்சி செய்கின்றேன்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

12 நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்.

Ver Capítulo Copiar




பிலிப்பியர் 3:12

Síguenos en:

Anuncios


Anuncios