லூக்கா 4:38 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202238 இயேசு ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, சீமோனுடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே சீமோனின் மாமியார் கடும் காய்ச்சலினால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள்; எனவே சிலர் அவளுக்காக இயேசுவை வேண்டிக்கொண்டார்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்38 பின்பு அவர் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, சீமோன் வீட்டிற்குப் போனார். அங்கு சீமோனுடைய மாமியார் கடும் ஜூரத்தோடு படுத்திருந்தாள். அவளை குணமாக்கவேண்டுமென்று அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள். Ver Capítuloபரிசுத்த பைபிள்38 இயேசு ஜெப ஆலயத்தில் இருந்து சென்றார். அவர் சீமோனின் வீட்டிற்குச் சென்றார். சீமோனின் மாமியார் மிகவும் உடல் நலமின்றி இருந்தாள். அவளுக்கு கடும் காய்ச்சலாய் இருந்தது. அவளுக்கு உதவி செய்யும் பொருட்டு எதையேனும் செய்யும்படியாக மக்கள் இயேசுவை வேண்டினர். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு38 இயேசு ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, சீமோனுடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே சீமோனின் மாமி கடும் காய்ச்சலினால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள். எனவே அவளுக்கு உதவி செய்யும்படி, அவர்கள் இயேசுவிடம் கேட்டார்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)38 பின்பு அவர் ஜெப ஆலயத்தை விட்டுப்புறப்பட்டு, சீமோன் வீட்டில் பிரவேசித்தார், சீமோனுடைய மாமி கடும் ஜூரமாய்க் கிடந்தாள். அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள். Ver Capítulo |