புலம்பல் 2:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 அவர் ஒரு பகைவனைப்போல வில்லை நாணேற்றினார்; அவரது வலதுகரம் ஆயத்தமாயிருக்கிறது. அவர் பகைவனைப்போல கண்ணுக்கு இனியவர்களையெல்லாம் வெட்டிப்போட்டார்; சீயோன் மகளின் கூடாரத்தில் தமது கடுங்கோபத்தை நெருப்பைப்போல் ஊற்றிவிட்டார். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 பகைவனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்; எதிரியைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டி நின்று, கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்; மகளாகிய சீயோனின் கூடாரத்திலே தம்முடைய கோபத்தை அக்கினியைப்போல் விழச்செய்தார். Ver Capítuloபரிசுத்த பைபிள்4 கர்த்தர் தனது வில்லை ஒரு பகைவனைப் போன்று வளைத்தார். அவர் தனது வாளை வலது கையில் ஏந்தினார். அவர் யூதாவினுள் கண்ணுக்கு அழகான ஆண்களை எல்லாம் கொன்றார். கர்த்தர் ஒரு பகைவனைப்போன்று அவர்களைக் கொன்றார். கர்த்தர் தனது கோபத்தை ஊற்றினார். அவர் சீயோனின் கூடாரங்களில் அதனை ஊற்றினார். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 பகைஞனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்; சத்துருவைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டி நின்று, கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்; சீயோன் குமாரத்தியின் கூடாரத்திலே தம்முடைய உக்கிரத்தை அக்கினியைப்போல் சொரியப்பண்ணினார். Ver Capítulo |