எரேமியா 31:16 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 யெகோவா கூறுவது இதுவே: “உன் அழுகையின் குரலை அடக்கி, கண்ணீர் விடாதபடி உன் கண்களை தடுத்துவிடு. ஏனெனில் உன் செயலுக்கான பலன் கிடைக்கும்” என்று யெகோவா அறிவிக்கிறார். “உன் பிள்ளைகள் தங்கள் பகைவரின் நாட்டிலிருந்து திரும்பி வருவார்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 நீ அழாமல் உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர்விடாமல் உன் கண்களைக் காத்துக்கொள் என்று யெகோவா சொல்லுகிறார்; உன் செயல்களுக்குப் பலனுண்டென்று யெகோவா சொல்லுகிறார்; அவர்கள் எதிரியின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள். Ver Capítuloபரிசுத்த பைபிள்16 ஆனால் கர்த்தர் கூறுகிறார், “அழுகையை நிறுத்துங்கள்! உங்கள் கண்களை கண்ணீரால் நிறைக்காதீர்கள்! உங்கள் வேலைக்காக நீங்கள் பரிசளிக்கப்படுவீர்கள்!” “இஸ்ரவேல் ஜனங்கள் தம் பகைவரது நாடுகளிலிருந்து திரும்ப வருவார்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர்விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள். Ver Capítulo |