எரேமியா 23:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 நான் எருசலேமின் இறைவாக்கு உரைப்போர் மத்தியிலுங்கூட மோசமான ஒரு செயலைக் கண்டேன். அவர்கள் விபசாரம் செய்கிறார்கள். உண்மை வழியில் வாழவில்லை. ஒருவனும் தனது கொடுமையைவிட்டுத் திரும்பாதபடி, தீயவரின் கைகளைப் பெலப்படுத்துகிறார்கள். அவர்கள் எல்லோரும் எனக்கு சோதோமைப்போல் இருக்கிறார்கள். எருசலேம் மக்கள் கொமோராவைப்போல் இருக்கிறார்கள்.” Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்செய்து, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பைவிட்டுத் திரும்பாமல் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்; அவர்கள் எல்லோரும் எனக்குச் சோதோமைப்போலவும், அதின் குடிமக்கள் கொமோராவைப்போலவும் இருக்கிறார்கள். Ver Capítuloபரிசுத்த பைபிள்14 இப்போது நான் யூதாவிலுள்ள தீர்க்கதரிசிகள் எருசலேமில் பயங்கரமான செயல்கள் செய்வதைப் பார்க்கிறேன். இத்தீர்க்கதரிசிகள் வேசித்தனம் என்னும் பாவத்தைச் செய்கின்றனர். அவர்கள் பொய்களைக் கேட்கின்றனர். அவர்கள் பொய்யான போதனைகளுக்கு அடிபணிகிறார்கள். அவர்கள் தீயவர்கள் தொடர்ந்து தீயச் செயல்களைச் செய்ய ஊக்குவிக்கிறார்கள். எனவே, ஜனங்கள் பாவம் செய்வதை நிறுத்தவில்லை. அவர்கள் சோதோமின் ஜனங்களைப்போன்று இருக்கிறார்கள். இப்போது எருசலேம் எனக்கு கொமோராபோன்று உள்ளது.” Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்பண்ணி, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பைவிட்டுத் திரும்பாதபடிக்குப் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்; அவர்கள் எல்லாரும் எனக்குச் சோதோமைப்போலும், அதின் குடிகள் கொமோராவைப்போலும் இருக்கிறார்கள். Ver Capítulo |