அப்போஸ்தலர் 15:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 திருச்சபை அவர்களை வழியனுப்பி வைத்தது. அவர்கள் பெனிக்கே வழியாகவும், சமாரியா வழியாகவும் பயணம் பண்ணுகையில், யூதரல்லாத மக்கள் எவ்விதம் கர்த்தரிடம் மனந்திரும்பி இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள். இந்தச் செய்தி சகோதரர் எல்லோருக்கும் பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 அப்படியே அவர்கள் சபை மக்களால் வழியனுப்பப்பட்டு, பெனிக்கே சமாரியா நாடுகளின்வழியாகப்போய், யூதரல்லாதோர் மனம் மாறிய செய்தியை அறிவித்து, சகோதரர்கள் எல்லோருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள். Ver Capítuloபரிசுத்த பைபிள்3 அவர்கள் பயணத்திற்கு சபை உதவிற்று. பெனிக்கே, சமாரியா ஆகிய தேசங்களின் வழியாக அம்மனிதர்கள் சென்றனர். யூதரல்லாத மக்கள் உண்மையான தேவனிடம் திரும்பியது குறித்த அனைத்தையும் அவர்கள் கூறினர். இது எல்லா சகோதரர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கிற்று. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 இப்படியாக திருச்சபை அவர்களை வழியனுப்பி வைத்தது. அவர்கள் பெனிக்கேயா வழியாகவும், சமாரியா வழியாகவும் பயணம் செய்யும்போது யூதரல்லாத மக்கள் எவ்விதம் கர்த்தரிடம் திரும்பி இருக்கின்றார்கள் என்பதை அங்கிருந்த சகோதர சகோதரிகளுக்கு அறிவித்தார்கள். இந்தச் செய்தி அவர்கள் எல்லோருக்கும் மிகுந்த மனமகிழ்ச்சியை அளித்தது. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 அந்தப்படி அவர்கள் சபையாரால் வழிவிட்டனுப்பப்பட்டு, பெனிக்கே சமாரியா நாடுகளின் வழியாய்ப் போய், புறஜாதியார் மனந்திரும்பின செய்தியை அறிவித்து, சகோதரர் எல்லாருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள். Ver Capítulo |