La Biblia Online

- Anuncios -




சகரியா 1:4 - பரிசுத்த பைபிள்

4 கர்த்தர், “நீங்கள் உங்கள் முற்பிதாக்களைப் போன்றிருக்கக் கூடாது. கடந்த காலத்தில், தீர்க்கதரிசிகள் அவர்களிடம், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நீங்கள் உங்களது தீய வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என விரும்புகிறார். தீயவற்றைச் செய்வதை நிறுத்துங்கள்!’ என்றார்கள். ஆனால், உங்கள் முற்பிதாக்கள் நான் சொன்னதைக் கேட்கவில்லை” என்றார். கர்த்தர் இவற்றைச் சொன்னார்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 உங்கள் முன்னோர்களைப்போல் இருக்காதீர்கள்; முந்தின தீர்க்கதரிசிகள் அவர்களை நோக்கி: உங்கள் பொல்லாத வழிகளையும், உங்கள் பொல்லாத செயல்களையும்விட்டுத் திரும்புங்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்று கூப்பிட்டார்கள்; ஆனாலும் எனக்குச் செவிகொடுக்காமலும் என்னைக் கவனிக்காமலும் போனார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 நீங்கள் உங்கள் முற்பிதாக்களைப்போல் இருக்கவேண்டாம். முந்தைய இறைவாக்கினர்களும் அவர்களிடம், ‘உங்கள் பொல்லாத வழிகளையும், பொல்லாத செயல்களையும் விட்டுத் திரும்புங்கள்’ என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார் என்று சொன்னார்கள். ஆனால் அவர்களோ எனக்குச் செவிகொடுக்கவுமில்லை, என்னைப் பொருட்படுத்தவுமில்லை என யெகோவா அறிவிக்கிறார்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 உங்கள் பிதாக்களைப் போலிராதேயுங்கள்; முந்தின தீர்க்கதரிசிகள் அவர்களை நோக்கி: உங்கள் பொல்லாத வழிகளையும், உங்கள் பொல்லாத கிரியைகளையும் விட்டுத் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூப்பிட்டார்கள்; ஆனாலும் எனக்குச் செவிகொடாமலும் என்னைக் கவனியாமலும் போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Ver Capítulo Copiar




சகரியா 1:4

Síguenos en:

Anuncios


Anuncios