தீத்து 2:8 - பரிசுத்த பைபிள்8 பேசும்போது உண்மையையே பேசு. அதனால் எவரும் உன்னை விமர்சிக்க முடியாது. நமக்கு எதிராக எதையும் தவறாகச் சொல்ல முடியாத நிலையில் நம்மை எதிர்த்துப் பேச வரும் ஒவ்வொருவரும் வெட்கப்படுவர். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே வேறுபாடில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம் கண்டுபிடிக்க முடியாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாக இருப்பாயாக. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 மற்றவர்கள் குற்றம்காண இயலாதபடி, நலமான பேச்சுக்களையே பேசவேண்டும். அப்பொழுது உன்னை எதிர்க்கிறவர்கள் வெட்கமடைவார்கள். ஏனெனில் நம்மைப்பற்றி தீமையாய்ப் பேசுவதற்கு அவர்களுக்கு எதுவும் இருக்காது. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 மற்றவர்கள் குற்றம் காண முடியாதபடி நலமான வார்த்தைகளைப் பேசு. அப்போது உன்னை எதிர்க்கின்றவர்கள் நம்மைக் குறித்து தீமையாய்ப் பேச வழியேதும் இன்றி வெட்கத்துக்குள்ளாவார்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக. Ver Capítulo |