ரோமர் 5:14 - பரிசுத்த பைபிள்14 ஆனால் ஆதாம் காலத்திலிருந்து மோசே வரைக்கும் மரணமானது எல்லோரையும் ஆட்கொண்டது. தேவனுக்குக் கீழ்ப்படியாது பாவம் செய்ததால் ஆதாம் மரணமுற்றான், ஆனாலும் ஆதாமைப்போல பாவம் செய்யாமலிருந்தும் பலர் மரணமடைந்தனர். பின்னால் வந்த இயேசுவைப் போன்றவனே ஆதாம். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 அப்படியிருந்தும், மரணமானது ஆதாம் முதல் மோசே வரைக்கும், ஆதாமின் கீழ்ப்படியாமைக்கு இணையாகப் பாவம் செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம், பின்பே வந்தவருக்கு முந்தின அடையாளமானவன். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 ஆனால், மரணம் ஆதாமின் காலந்தொடங்கி, மோசேயின் காலம்வரை வாழ்ந்தவர்களை ஆளுகை செய்தது. ஆதாமுக்குக் குறிப்பிட்ட கட்டளையை அவன் மீறியதுபோல் பாவம் செய்யாதவர்களையும் மரணம் ஆட்சிசெய்தது. ஆதாமோ வரவிருந்த ஒருவருக்கு மாதிரியானான். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 ஆனாலும் ஆதாம் தொடங்கி மோசே வரை வாழ்ந்தவர்கள் ஆதாம் செய்தது போல கட்டளையை மீறிப் பாவம் செய்யாதபோதிலும் மரணம் அவர்களையும் ஆட்சி செய்தது. வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒருவருக்கு ஆதாம் மாதிரியானவன். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன். Ver Capítulo |