வெளிப்படுத்தல் 7:1 - பரிசுத்த பைபிள்1 அதற்குப் பிறகு நான்கு தேவதூதர்கள் பூமியின் நான்கு மூலைகளிலும் நிற்பதைக் கண்டேன். நான்கு தூதர்களும் நான்கு காற்றுகளையும் பிடித்து வைத்திருந்தனர். பூமியின் மீதும் கடலின் மீதும் மரத்தின் மீதும் காற்று அடியாதபடிக்குக் கட்டுப்படுத்தினர். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 இவைகளுக்குப் பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலோ, கடலின்மேலோ, ஒரு மரத்தின்மேலோ காற்று அடிக்காதபடி பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருப்பதைப் பார்த்தேன். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 பின்பு நான்கு இறைத்தூதர்கள் பூமியின் நான்கு மூலைகளிலும் நிற்க கண்டேன். அவர்கள் நிலத்தையும், கடலையும், மரங்களையும் சேதப்படுத்தாமலும் பூமியின் நான்கு வகை காற்றை வீசாமலிருக்கவும் செய்தார்கள். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 இதற்குப் பின்பு, பூமியின் நான்கு மூலைகளிலும் நான்கு இறைதூதர்கள் நிற்கக் கண்டேன். அவர்கள் நிலத்தின் மீதோ, கடலின் மீதோ, மரத்தின் மீதோ காற்று வீசி அவைகளைச் சேதப்படுத்தாதபடி பூமியின் நான்கு திசை காற்றுகளைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலாவது, சமுத்திரத்தின்மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன். Ver Capítulo |