வெளிப்படுத்தல் 5:11 - பரிசுத்த பைபிள்11 பிறகு நான் பல தூதர்களைப் பார்த்தேன். அவர்களது குரலைக் கேட்டேன். அத் தூதர்கள் சிம்மாசனத்தைச் சூழ்ந்து இருந்தனர். அவர்கள் ஜீவன்களையும், முதியவர்களையும் சூழ்ந்து இருந்தனர். அவர்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆயிரமாகவும் பத்தாயிரம் பத்தாயிரமாகவும் இருந்தது. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சுற்றியிருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய எண்ணிக்கை கோடானகோடியாக இருந்தது. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 பின்பு நான் பார்த்தேன், அப்பொழுது அநேக இறைத்தூதர்களின் குரலைக் கேட்டேன்; இறைத்தூதர்களோ, எண்ணிக்கையில் ஆயிரம் ஆயிரமாகவும், பத்தாயிரம் பத்தாயிரமாகவும் இருந்தார்கள். அவர்கள் அந்த அரியணையையும், அந்த உயிரினங்களையும், அந்த சபைத்தலைவர்களையும் சுற்றி நின்றார்கள். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 அதன்பின்பு நான் பார்த்தபோது, அரியணையையும் அந்த உயிரினங்களையும் மூப்பர்களையும் சுற்றிக் காணப்பட்ட இறைதூதர்களின் குரலைக் கேட்டேன். அவர்கள் எண்ணிக்கையில் ஆயிரங்கள் ஆயிரங்களாகவும், இலட்சங்கள் இலட்சங்களாகவும் இருந்தார்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது. Ver Capítulo |