வெளிப்படுத்தல் 10:10 - பரிசுத்த பைபிள்10 அதனால் தூதனின் கையில் இருந்து அச்சிறு தோல் சுருளை நான் வாங்கினேன். அதனை நான் தின்றேன். அது என் வாயில் தேனைப் போன்று இனித்தது. ஆனால் அது என் வயிற்றுக்குப் போனதும் கசந்தது. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 நான் அந்தச் சிறிய புத்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைச் சாப்பிட்டேன்; என் வாய்க்கு அது தேனைப்போல இனிமையாக இருந்தது; நான் அதைச் சாப்பிட்டவுடனே என் வயிறு கசப்பானது. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 நான் அந்தத் தூதனுடைய கையிலிருந்து அந்தச் சிறிய புத்தகச்சுருளை எடுத்து, அதைச் சாப்பிட்டேன். அது என் வாய்க்கு, தேனைப்போல் இனிமையான சுவையைக் கொடுத்தது. ஆனால் அதை நான் சாப்பிட்டு முடித்தபோதோ, அது என்னுடைய வயிற்றில் புளிப்பை ஏற்படுத்தியது. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 நான் அந்த இறைதூதனுடைய கையிலிருந்து அந்தச் சிறிய புத்தகச் சுருளை எடுத்து, அதை உண்டேன். அது என் வாய்க்கு, தேன் போல் இனிமையான சுவையைக் கொடுத்தது. ஆனால் அதை நான் உண்டு முடித்த போதோ, அது என்னுடைய வயிற்றில் கசப்பை ஏற்படுத்தியது. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அது தேனைப்போல மதுரமாயிருந்தது; நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று. Ver Capítulo |