பிலேமோன் 1:22 - பரிசுத்த பைபிள்22 மேலும் நான் தங்குவதற்காக ஓர் இடத்தை ஏற்பாடு செய்யுங்கள். உங்கள் வேண்டுதலுக்கு தேவன் செவிசாய்ப்பார் என்று நான் நம்புகிறேன். உங்கள் பிரார்த்தனைகள் மூலமாக நான் உங்களிடம் வர முடியும் என்றும் நம்புகிறேன். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 மேலும், உங்களுடைய ஜெபங்களினாலே நான் உங்களிடம் அனுப்பப்படுவேன் என்று நம்பியிருக்கிறதினால், நான் தங்குவதற்காக ஒரு அறையை எனக்காக ஆயத்தம்பண்ணும். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 மேலும் ஒரு வேண்டுகோள்: எனக்காக ஒரு தங்கும் இடத்தை ஆயத்தம் செய். ஏனெனில் உங்களுடைய மன்றாட்டுகளின் பிரதிபலனாக, நான் மீண்டும் உங்களிடம் வருவேன் என்று எதிர்பார்க்கிறேன். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு22 மேலும் ஒரு வேண்டுகோள், எனக்கு ஒரு தங்கும் இடத்தை ஏற்பாடு செய். ஏனெனில் உங்களுடைய மன்றாடல்களின் விளைவாக நான் மீண்டும் உங்களிடம் வருவேன் என்று எதிர்பார்க்கின்றேன். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 மேலும், உங்கள் விண்ணப்பங்களினாலே நான் உங்களுக்கு அநுக்கிரகிக்கப்படுவேனென்று நம்பியிருக்கிறபடியால், நான் இருக்கும்படிக்கு ஓரிடத்தை எனக்காக ஆயத்தம்பண்ணும். Ver Capítulo |