La Biblia Online

- Anuncios -




எண்ணாகமம் 15:39 - பரிசுத்த பைபிள்

39 நீங்கள் இம்முடிச்சுகளைப் பார்க்கும்போதெல்லாம் கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை நினைவுப்படுத்திக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் அவற்றுக்குக் கீழ்ப்படிவீர்கள். இதனால் மறதி காரணமாக பாவம் செய்யாமல் இருப்பீர்கள். உங்கள் உடம்பும், கண்களும் விரும்புகிற காரியங்களை செய்யமாட்டீர்கள்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

39 நீங்கள் பின்பற்றிச் சோரம்போகிற உங்களுடைய இருதயத்திற்கும் உங்களுடைய கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப் பார்த்து, யெகோவாவின் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்படியே செய்யும்படி, அது உங்களுக்குத் தொங்கலாக இருக்கவேண்டும்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

39 நீங்கள் இந்தக் தொங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் யெகோவாவின் கட்டளைகளை நினைவுபடுத்திக் கொள்வீர்கள். அதனால் நீங்கள் அவற்றிற்குக் கீழ்ப்படிவீர்கள். உங்களுடைய சொந்த இருதய ஆசைகளின்படியும், கண்களின் ஆசையின்படியும் போய் இறைவனை வழிபடாமல் உங்களை வேசித்தனத்திற்கு உள்ளாக்காதிருப்பீர்கள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

39 நீங்கள் பின்பற்றிச் சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும் உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப் பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்படியே செய்யும்படிக்கு, அது உங்களுக்குத் தொங்கலாய் இருக்கவேண்டும்.

Ver Capítulo Copiar




எண்ணாகமம் 15:39

Síguenos en:

Anuncios


Anuncios