கொலோசேயர் 2:23 - பரிசுத்த பைபிள்23 இவை புத்திசாலித்தனமாய்த் தோன்றலாம். ஆனால் இச்சட்டங்கள் போலிப் பணிவும் சரீரத்தைத் தண்டிக்கக் கூடியதுமான மனிதரால் உருவாக்கப்பட்ட மதத்தின் சட்டங்கள் மட்டுமே ஆகும். ஆனால் இவை மக்கள் பாவத்தில் இருந்து விடுபட உதவாது. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 இப்படிப்பட்டப் போதனைகள் சுயவிருப்பமான ஆராதனையையும், போலியான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும்பற்றி ஞானம் என்கிற பெயர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பாதுகாப்பதற்கேயன்றி வேறு எதற்கும் உபயோகப்படாது. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 அவர்களுடைய இந்தக் கட்டளைகள், தாங்களே தங்கள்மேல் திணித்துக் கொண்ட வழிபாட்டையும், பொய்த் தாழ்மையையும், உடல் ஒடுக்குதல்களையும் பொறுத்தவரையில் ஞானமானதுபோல் தோன்றலாம். ஆனால் உடல் ஆசைகளை அடக்கி ஆள்வதற்கு இவை பயனற்றது. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு23 அவர்களின் இந்தக் கட்டளைகள், தாங்களே தங்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட வழிபாட்டையும் பொய்யான தாழ்மையையும் உடல் ஒடுக்குதல்களையும் பொறுத்தவரையில், ஞானமானவை போல் காணப்படுவது உண்மையே. ஆனால் உடல் ஆசைகளை அடக்கி ஆளுவதற்கு இவை பயன்படாது. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது. Ver Capítulo |