அப்போஸ்தலர் 14:26 - பரிசுத்த பைபிள்26 அங்கிருந்து பவுலும் பர்னபாவும் சிரியாவிலுள்ள அந்தியோகியாவிற்குக் கடல் வழியாகப் பயணமாயினர். இந்நகரில்தான் விசுவாசிகள் அவர்களை தேவனுடைய கண்காணிப்பில் ஆட்படுத்தி இவ்வேலை செய்ய அனுப்பியிருந்தனர். இப்போது அவர்கள் தங்கள் வேலையை முடித்திருந்தனர். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 அங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின செயல்களுக்காக தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு அந்தியோகியாவிற்கு வந்தார்கள். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 அத்தலியாவிலிருந்து அவர்கள் அந்தியோகியாவுக்குக் கப்பல் மூலமாய்த் திரும்பிப் போனார்கள். அங்குதான் இப்பொழுது நிறைவேற்றிய பணிக்காக, இறைவனுடைய கிருபைக்கு அவர்கள் ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு26 அவர்கள் அத்தலியாவிலிருந்து கப்பல் மூலமாக அந்தியோகியாவுக்குத் திரும்பி வந்தார்கள். அவர்கள் பணி செய்யத் தொடங்க முன் இங்கேதான் இறைவனுடைய கிருபைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள். இப்போது அதை நிறைவேற்றி முடித்தவர்களாக திரும்பி வந்திருந்தார்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 அங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின கிரியைக்காக தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டுப் புறப்பட்டு அந்தியோகியாவுக்கு வந்தார்கள். Ver Capítulo |