அப்போஸ்தலர் 13:11 - பரிசுத்த பைபிள்11 இப்போது கர்த்தர் உன்னைத் தொடுவார். நீ குருடனாவாய். சில காலம் வரைக்கும் உன்னால் எதையும் பார்க்க முடியாது. சூரியனிலிருந்து வரும் ஒளியைக் கூடப் பார்க்க முடியாது” என்றான். அப்போது எலிமாஸுக்கு எல்லாம் இருண்டு போயின. பார்க்க முடியாதபடி அங்குமிங்கும் தடுமாறினான். கையால் பிடித்து அவனை வழி நடத்துகிற ஒருவனைக் கண்டு பிடிக்க முயற்சிசெய்துகொண்டிருந்தான். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 இதோ, இப்பொழுதே கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, கொஞ்சகாலம் நீ சூரியனைப் பார்க்காமல் குருடனாக இருப்பாய் என்றான். உடனே அவன் தன் கண்பார்வையை இழந்தான்; அவன் தடுமாறி, தனக்கு கை கொடுக்கிறவர்களைத் தேடினான். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 இப்பொழுதே, கர்த்தருடைய கரம் உனக்கு எதிராய் இருக்கிறது. நீ இப்பொழுது குருடனாகி கொஞ்சக் காலத்திற்கு சூரிய வெளிச்சத்தைக் காணமாட்டாய்” என்றான். உடனே அவன் பார்வை மங்கியது, இருளும் சூழ்ந்தது. அவன் கைகளினால் தடவி, தன் கையைப் பிடித்து நடத்துவதற்கு ஒருவனைத் தேடினான். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 இப்பொழுதே, கர்த்தருடைய கரம் உனக்கு எதிராய் இருக்கின்றது. நீ இப்போது பார்வையற்றவனாகி கொஞ்சக் காலத்திற்கு சூரிய வெளிச்சத்தைக் காண மாட்டாய்” என்றான். உடனே அவன் பார்வை மங்கி, இருள் சூழ்ந்தது. அவன் கைகளினால் தடவி, தன்னைக் கைப்பிடித்து நடத்துவதற்கு ஒருவனைத் தேடினான். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 இதோ, இப்பொழுதே, கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, சிலகாலம் சூரியனைக் காணாமல் நீ குருடனாயிருப்பாய் என்றான். உடனே மந்தாரமும் இருளும் அவன்மேல் விழுந்தது; அவன் தடுமாறி, கைலாகு கொடுக்கிறவர்களைத் தேடினான். Ver Capítulo |