La Biblia Online

- Anuncios -




2 தெச 1:11 - பரிசுத்த பைபிள்

11 அதற்காகத்தான் நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். உங்களை நல்வழியில் வாழச் செய்யுமாறு நாங்கள் தேவனை வேண்டுகிறோம். இதற்காகவே தேவனால் நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். நல்லதைச் செய்ய வேண்டும் என்னும் ஆவல் உங்களிடம் இருக்கிறது. உங்களது விசுவாசம் உங்களைப் பணியாற்ற வைக்கும். மேலும், மேலும் இத்தகைய செயலைச் செய்ய தேவன் உங்களுக்கு உதவுமாறு நாங்கள் அவரை வேண்டுகிறோம்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

11 ஆகவே, நம்முடைய தேவனும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அளிக்கும் கிருபையின்படியே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் உங்களிடத்திலும், நீங்கள் அவரிடத்திலும் மகிமைப்படும்படிக்கு;

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

11 இதை மனதில்கொண்டு, நம்முடைய இறைவனின் அழைப்புக்கு நீங்கள் தகுதிவுள்ளவர்கள் என்று எண்ணவேண்டும் என, உங்களுக்காக நாங்கள் மன்றாடுகிறோம். அத்துடன், உங்களுடைய நல்ல நோக்கங்கள் எல்லாவற்றையும், உங்களுடைய விசுவாசத்தின் ஏவுதலினால் உண்டாகும். உங்களது ஒவ்வொரு செயலையும், இறைவன் தம்முடைய வல்லமையினால் நிறைவேற்றவேண்டும் என்றும் மன்றாடுகிறோம்.

Ver Capítulo Copiar

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

11 இதை மனதில் கொண்டவர்களாக, நம்முடைய இறைவனின் அழைப்புக்கு நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் கருதப்பட வேண்டும் என உங்களுக்காக நாங்கள் தொடர்ந்து மன்றாடி வருகின்றோம். அத்துடன் உங்களுடைய அனைத்து நல்ல நோக்கங்களையும், உங்களுடைய விசுவாசத்தின் தூண்டுதலினால் உண்டாகின்ற உங்களது அனைத்து செயலையும் இறைவன் தம்முடைய வல்லமையினால் நிறைவாக்க வேண்டும் என்றும் மன்றாடுகிறோம்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

11 ஆகையால், நம்முடைய தேவனும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அளிக்கும் கிருபையின்படியே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் உங்களிடத்திலும், நீங்கள் அவரிடத்திலும் மகிமைப்படும்பொருட்டாக.

Ver Capítulo Copiar




2 தெச 1:11

Síguenos en:

Anuncios


Anuncios