2 நாளா 18:31 - பரிசுத்த பைபிள்31 இரதப்படைத் தளபதிகள் யோசபாத்தைக் கண்டதும் “இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் அங்கே இருக்கிறான்!” என்று எண்ணினார்கள். எனவே யோசபாத்தைத் தாக்க அவர்கள் திரும்பினார்கள். ஆனால் யோசபாத் சத்தமிட்டு வேண்டினபடியால் கர்த்தர் அவனுக்கு உதவினார். தேவன் இரதப்படைத் தளபதிகளை யோசபாத்தை விட்டு விலகும்படி செய்தார். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் கண்டபோது, இவன் தான் இஸ்ரவேலின் ராஜா என்று நினைத்துப் போர்செய்ய அவனை சூழ்ந்துகொண்டார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரலிட்டான்; யெகோவா அவனுக்கு உதவி செய்தார்; அவர்கள் அவனைவிட்டு விலகும்படி தேவன் செய்தார். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 தேர்ப்படை தளபதிகள் யோசபாத்தைக் கண்டபோது, “நிச்சயமாக இவன்தான் இஸ்ரயேலின் அரசன்” என்று நினைத்து அவனைத் தாக்குவதற்குத் திரும்பினார்கள். ஆனால் யோசபாத் கதறினான். யெகோவா அவனுக்கு உதவி செய்தார். இறைவன் அவர்களை அவனிடமிருந்து விலகிப்போகச் செய்தார். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன் தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்பண்ண அவனைச் சூழ்ந்து கொண்டார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரல் இட்டான்; கர்த்தர் அவனுக்கு அநுசாரியாயிருந்தார்; அவர்கள் அவனை விட்டு விலகும்படி தேவன் செய்தார். Ver Capítulo |