புலம்பல் 2:13 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 மகளாகிய எருசலேமே, நான் உனக்குச் சாட்சியாக என்னத்தைச் சொல்லுவேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? மகளாகிய சீயோன் என்னும் இளம்பெண்ணே, நான் உன்னைத் தேற்றுவதற்கு உன்னை எதற்கு ஒப்பிட்டுச் சொல்லுவேன்? உன் காயம் சமுத்திரத்தைப்போல் பெரிதாயிருக்கிறதே, உன்னைக் குணமாக்குகிறவன் யார்? Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 எருசலேம் மகளே! உனக்கு என்ன சொல்வேன்? உன்னை நான் எதனோடு ஒப்பிடுவேன்? சீயோன் கன்னி மகளே, நான் உன்னைத் தேற்றும்படி எதனுடன் உன்னை ஒப்பிட முடியும்? உன் காயம் கடலைப்போல் ஆழமாயிருக்கிறதே. யார் உன்னைக் குணமாக்க முடியும்? Ver Capítuloபரிசுத்த பைபிள்13 சீயோன் மகளே, நான் எதனோடு உன்னை ஒப்பிட முடியும்? சீயோனின் கன்னிகையே, நான் உன்னை எதனோடு ஒப்பிடமுடியும்? நான் உன்னை எப்படி ஆறுதல் செய்யமுடியும்? உனது அழிவானது கடலைப்போன்று அவ்வளவு பெரிதாக இருக்கிறது. எவரும் உன்னை குணப்படுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 எருசலேம் குமாரத்தியே, நான் உனக்குச் சாட்சியாக என்னத்தைச் சொல்லுவேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? சீயோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நான் உன்னைத் தேற்றும்படிக்கு உன்னை எதற்கு நிகர்சொல்லுவேன்? உன் காயம் சமுத்திரத்தைபோல் பெரிதாயிருக்கிறதே, உன்னைக் குணமாக்குகிறவன் யார்? Ver Capítulo |