எரேமியா 6:23 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள்; அவர்கள் கொடியவர்கள், இரக்கம் அறியாதவர்கள்; அவர்கள் சத்தம் கடலின் இரைச்சலைப்போல் இருக்கும்; மகளாகிய சீயோனே, அவர்கள் உனக்கு விரோதமாக போர்செய்யக் குதிரைகளின்மேலேறி அணியணியாக வருவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 அவர்கள் வில்லையும், ஈட்டியையும் ஆயுதமாய் ஏந்தியிருக்கிறார்கள்; அவர்கள் இரக்கமற்ற கொடியவர்கள். அவர்கள் தங்கள் குதிரைகளில் சவாரி செய்யும்போது அவர்களின் சத்தம், இரைகிற கடலைப் போலிருக்கிறது; சீயோன் மகளே! அவர்கள் போருக்கு அணிவகுத்த மனிதரைப்போல் உன்னைத் தாக்க வருகிறார்கள்.” Ver Capítuloபரிசுத்த பைபிள்23 வீரர்கள் வில்லையும் ஈட்டியையும் கொண்டு வருகின்றனர். அவர்கள் கொடுமையானவர்கள். அவர்களிடம் இரக்கம் இல்லை. அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள், அவர்கள், குதிரைகள் மேல் சவாரி செய்து வரும்போது, இரைகின்ற கடலைப்போன்று சத்தம் எழுப்புகிறார்கள். சண்டை செய்வதற்கு தயாராக அப்படை வந்துக்கொண்டிருக்கிறது. சீயோனின் குமாரத்தியே! அந்தப் படை உங்களை தாக்கிட வந்துகொண்டிருக்கிறது.” Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள்; அவர்கள் கொடியர், இரக்கம் அறியாதவர்கள்; அவர்கள் சத்தம் சமுத்திர இரைச்சலுக்குச் சமானமாயிருக்கும்; சீயோன் குமாரத்தியே, அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தசந்நத்தராய்க் குதிரைகளின்மேலேறி அணியணியாக வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். Ver Capítulo |