எரேமியா 49:20 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 ஆகையால் யெகோவா ஏதோமுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் தேமானின் குடிகளுக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மந்தையில் சிறியவர்கள் மெய்யாகவே அவர்களைப் பிடித்து இழுப்பார்கள், அவர்கள் இருக்கிற இருப்பிடங்களை அவர் மெய்யாகவே அழிப்பார் Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 ஆகையால், யெகோவா ஏதோமுக்கு விரோதமாக வகுத்த திட்டங்களையும், தேமானில் வாழ்கிறவர்களுக்கு விரோதமான அவரது நோக்கங்களையும் கேளுங்கள். மந்தையில் இளமையானவை இழுத்துச் செல்லப்படும். அவைகளின் நிமித்தம் அவைகளின் மேய்ச்சல் நிலத்தை முற்றுமாய் அழித்துப் போடுவான். Ver Capítuloபரிசுத்த பைபிள்20 எனவே, ஏதோம் ஜனங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தர் திட்டமிட்டுள்ளாரோ அதைக் கவனி! தீமான் ஜனங்களுக்கு கர்த்தர் என்ன செய்யவேண்டும் என்று முடிவு செய்தாரோ, அதை கவனி! ஏதோமின் மந்தையில் (ஜனங்கள்) உள்ள குட்டிகளைப் பகைவர்கள் இழுத்துப் போடுவார்கள். ஏதோமின் மேய்ச்சல் நிலம் அவர்கள் என்ன செய்தார்களோ அதினிமித்தம் வெறுமையாய்விடும். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 ஆகையால் கர்த்தர் ஏதோமுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் தேமானின் குடிகளுக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மந்தையில் சிறியவர்கள் மெய்யாகவே அவர்களைப் பிடித்திழுப்பார்கள், அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் மெய்யாகவே பாழாக்குவார். Ver Capítulo |