எரேமியா 4:30 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 பாழாய்ப்போன நீ இப்பொழுது என்ன செய்வாய்? நீ இரத்தாம்பரம் அணிந்தாலும், பொன் ஆபரணங்களால் உன்னை அலங்கரித்தாலும், உன் கண்களில் மையிட்டுக்கொண்டாலும், வீணாய் உன்னை அழகுபடுத்துவாய்; ஆசைநாயகர்கள் உன்னை அசட்டைசெய்து, உன் உயிரை வாங்கத் தேடுவார்கள். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 பாழாய்ப் போனவளே! நீ என்ன செய்கிறாய்? இரத்தாம்பர உடையை அணிந்து தங்க ஆபரணங்களால் உன்னை அலங்கரிப்பது ஏன்? நீ உன் கண்களுக்கு மையிடுவது ஏன்? நீ வீணாகவே அலங்கரிக்கிறாய்; உன் காதலர் உன்னை வெறுத்து உன் உயிரை வாங்கத் தேடுகிறார்கள். Ver Capítuloபரிசுத்த பைபிள்30 யூதாவே! நீ அழிக்கப்பட்டிருக்கிறாய். எனவே, நீ இப்பொழுது என்ன செய்துகொண்டிருக்கிறாய்? நீ அழகான சிவப்பு ஆடைகளை, ஏன் அணிந்துக்கொண்டிருக்கிறாய்? நீ தங்க நகைகளை ஏன் அணிந்துகொண்டிருக்கிறாய்? நீ கண்ணுக்கு மையிட்டு ஏன் அழகுபடுத்திக்கொண்டிருக்கிறாய். நீ உன்னை அழகு செய்கிறாய். ஆனால் இது வீணாகும். உனது நேசர்கள் உன்னை வெறுக்கின்றனர். அவர்கள் உன்னைக் கொலை செய்ய முயல்கின்றனர். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 பாழாய்ப்போன நீ இப்பொழுது என்ன செய்வாய்? நீ இரத்தாம்பரம் உடுத்தாலும், பொன்னாபரணங்களால் உன்னைச் சிங்காரித்தாலும், உன் கண்களில் மையிட்டுக்கொண்டாலும், வீணாய் உன்னை அழகுபடுத்துவாய்; சோரநாயகர் உன்னை அசட்டைபண்ணி, உன் பிராணனை வாங்கத் தேடுவார்கள். Ver Capítulo |