La Biblia Online

- Anuncios -




எரேமியா 29:22 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

22 பாபிலோன் ராஜா நெருப்பினால் எரித்துப்போட்ட சிதேக்கியாவுக்கும் ஆகாபுக்கும் யெகோவா உன்னைச் சமமாக்குவாராக என்று, அவர்களைக்குறித்து ஒரு சாபவார்த்தை பாபிலோனில் சிறையிருக்கிற யூதா அனைவருக்குள்ளும் வழங்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

22 இந்தப் பயங்கர செயலின் நிமித்தம் யூதாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு, பாபிலோனில் வசிப்போர், ‘பாபிலோன் அரசன் நெருப்பிலே சுட்டெரித்த சிதேக்கியாவைப்போலவும், ஆகாபைப்போலவும் யெகோவா உங்களை நடத்தட்டும்’ என்று சாபமான வார்த்தையாகச் சொல்வார்கள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

22 அனைத்து யூதா கைதிகளிலும் மற்றவர்களுக்குத் தீயவை ஏற்படட்டும் என்று கேட்கும்போதெல்லாம் அம்மனிதர்களை எடுத்துக்காட்டுகளாக வைத்துக்கொள்வார்கள். அக்கைதிகள் சொல்லுவார்கள்: ‘சிதேக்கியா மற்றும் ஆகாப் போன்று கர்த்தர் உன்னை நடத்தட்டும். பாபிலோனின் ராஜா அவ்விருவரையும் நெருப்பில் எரித்தான்.’

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

22 பாபிலோன் ராஜா அக்கினியினால் சுட்டுப்போட்ட சிதேக்கியாவுக்கும் ஆகாபுக்கும் கர்த்தர் உன்னைச் சமானமாக்கக்கடவரென்று, அவர்களைக்குறித்து ஒரு சாபவார்த்தை பாபிலோனிலே சிறையிருக்கிற யூதா அனைவருக்குள்ளும் வழங்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Ver Capítulo Copiar




எரேமியா 29:22

Síguenos en:

Anuncios


Anuncios