யாக்கோபு 2:11 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 ஏனென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் கொலை செய்யாதிருப்பாயாக என்றும் சொன்னார்; ஆதலால், நீ விபசாரம் செய்யாமலிருந்தும் கொலை செய்தாயானால் நியாயப்பிரமாணத்தை மீறினவனாவாய். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 “விபசாரம் செய்யாதே” என்று சொன்னவர், “கொலை செய்யாதே” என்றும் சொல்லியிருக்கிறார். எனவே நீ விபசாரம் செய்யாவிட்டாலும், கொலை செய்தால், நீ மோசேயின் சட்டத்தை மீறியவனாகின்றாய். Ver Capítuloபரிசுத்த பைபிள்11 “விபசாரம் செய்யாமல் இருப்பாயாக” என்று தேவன் கூறினார். அதோடு “கொலை செய்யாமல் இருப்பாயாக” என்றும் கூறியுள்ளார். எனவே, நீ விபசாரம் செய்யாமல் இருந்து, கொலை மட்டும் செய்வாயானால், பிறகு நீ சட்டத்தில் கட்டளைகளை உடைத்தவன் ஆகிறாய். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 “தகாத உறவுகொள்ளாதே” என்று சொன்னவர், “கொலை செய்யாதே” என்றும் சொல்லியிருக்கின்றார். எனவே நீ தகாத உறவில் ஈடுபடாவிட்டாலும், கொலை செய்தால், நீ நீதிச்சட்டத்தை மீறியவன் ஆகின்றாய். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 ஏனென்றால், விபசாரஞ்செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் கொலை செய்யாதிருப்பாயாக என்றும் சொன்னார்; ஆதலால், நீ விபசாரஞ்செய்யாமலிருந்தும் கொலை செய்தாயானால் நியாயப்பிரமாணத்தை மீறினவனாவாய். Ver Capítulo |