கொலோசேயர் 2:16 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 ஆகவே, உணவையும், பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையும் குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாமல் இருப்பானாக. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 எனவே நீங்கள் சாப்பிடுவது, குடிப்பது என்பவைகளைக் குறித்தோ, பண்டிகைகளையும், அமாவாசைகளையும், ஓய்வுநாட்களையும் குறித்தோ, ஒருவரும் உங்களை குற்றப்படுத்தாமல் இருக்கவேண்டும். Ver Capítuloபரிசுத்த பைபிள்16 ஆகையால், உண்பதைப் பற்றியும், குடிப்பதைப் பற்றியும், பண்டிகைகள், பௌர்ணமிகள், ஓய்வு நாட்கள் ஆகிய யூதர்களின் பழக்க வழக்கங்களைக் குறித்தும் எவரும் சட்டங்கள் உருவாக்க நீங்கள் அனுமதிக்காதீர்கள். மனித விதிமுறைகளைப் பின்பற்றாதீர்கள் Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 எனவே நீங்கள் உண்பது மற்றும் அருந்துவது குறித்தோ பண்டிகைகள், அமாவாசை நாட்கள், ஓய்வுநாட்கள் குறித்தோ எவரும் உங்களை நியாயம் தீர்க்க இடமளிக்க வேண்டாம். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. Ver Capítulo |