2 கொரி 2:3 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 என்னுடைய சந்தோஷம் உங்களெல்லோருக்கும் சந்தோஷமாக இருக்கும் என்று, நான் உங்களெல்லோரையும்பற்றி நம்பிக்கை உள்ளவனாக இருந்து, நான் வரும்போது, என்னைச் சந்தோஷப்படுத்தவேண்டியவர்களால் நான் துக்கமடையாமல் இருப்பதற்காக, அதை உங்களுக்கு எழுதினேன். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 இதனாலேயே, நான் இவ்வாறு உங்களுக்குக் கடிதம் எழுதினேன். நான் உங்களிடம் வரும்போது, என்னை மகிழ்விக்க வேண்டியவர்களால் நான் துக்கமடைய விரும்பவில்லை. நீங்கள் எல்லோரும் என் சந்தோஷத்தில் பங்கு கொள்வீர்கள் என்று, நான் உங்கள் எல்லோரையும் குறித்து மனவுறுதியுள்ளவனாய் இருந்தேன். Ver Capítuloபரிசுத்த பைபிள்3 இந்தக் காரணத்துக்காகத்தான் உங்களுக்குக் கடிதம் எழுதினேன். அதனால் உங்களை சந்திக்கும்போது, என்னை மகிழ்ச்சிப்படுத்தப்போகும் உங்களைத் துயரப்படுத்தமாட்டேன். எனது மகிழ்ச்சியை நீங்கள் அனைவரும் பகிர்ந்துகொள்வீர்கள் என்று உறுதியாக எண்ணுகிறேன். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 நான் உங்களிடம் வரும்போது என்னை மகிழ்விக்க வேண்டியவர்களால் எனக்குத் துக்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே உங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு கடிதத்தை முன்னர் எழுதினேன். ஏனெனில் என்னுடைய மகிழ்ச்சியே உங்கள் அனைவரதும் மகிழ்ச்சியாயிருக்கும் என்று, உங்கள் எல்லோரையும் குறித்த நிச்சயம் எனக்கு இருக்கின்றது. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 என்னுடைய சந்தோஷம் உங்களெல்லாருக்கும் சந்தோஷமாயிருக்குமென்று, நான் உங்களெல்லாரையும்பற்றி நம்பிக்கையுள்ளவனாயிருந்து, நான் வரும்போது, என்னைச் சந்தோஷப்படுத்தவேண்டியவர்களால் நான் துக்கமடையாதபடிக்கு, அதை உங்களுக்கு எழுதினேன். Ver Capítulo |