2 கொரி 2:17 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்படம் செய்து பேசாமல், சுத்தமாகவும், தேவனால் அருளப்பட்டபடியாகவே, கிறிஸ்துவிற்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 அநேகர் இறைவனுடைய வார்த்தையை, மலிவான கடைச்சரக்காக கருதி இலாபம் பெற விற்கிறார்கள். நாங்கள் அவர்களைப் போன்றவர்கள் அல்ல. மாறாக, நாங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட மனிதரைப்போல், கிறிஸ்துவில் இறைவனுக்கு முன்பாக நேர்மையுடன் அதைப் பேசுகிறோம். Ver Capítuloபரிசுத்த பைபிள்17 மற்றவர்களைப் போன்று, நாங்கள் தேவனுடைய வார்த்தையை இலாபத்துக்காக விற்பதில்லை. ஆனால் தேவனுக்கு முன்னால் கிறிஸ்துவுக்குள் உண்மையையே பேசுகிறோம். தேவனால் அனுப்பப்பட்டவர்களைப் போல் நாங்கள் பேசுகிறோம். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 ஆதலால், இலாப நோக்கத்துக்காக இறைவனுடைய வார்த்தையை வியாபாரப் பொருளாக்கி, அதை மாற்றிப் பேசுகின்ற அநேகரைப் போல் இராமல், இறைவனால் அனுப்பப்பட்டவர்களும், நேர்மையானவர்களும் இறைவனின் பார்வையில் கிறிஸ்துவுக்குள் பேசுகின்றவர்களுமாக இருக்கின்றோம். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம். Ver Capítulo |