ரோமர் 1:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 பிரியமானவர்களே, நான் மற்ற இடங்களில் இருக்கின்ற யூதரல்லாத மக்கள் மத்தியில் ஊழியத்தின் பலாபலன்களைப் பெற்றது போலவே, உங்கள் மத்தியிலும் பலாபலன்களைப் பெறும் பொருட்டு அங்கே வருவதற்குப் பல முறை திட்டமிட்டேன்; ஆனாலும் இதுவரை வர முடியாதபடி தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது என்பதைக் குறித்து நீங்கள் தெரியாதிருப்பதை நான் விரும்பவில்லை. Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 சகோதரர்களே, யூதரல்லாதவர்களாகிய மற்றவர்களுக்குள்ளே நான் அநேகரை இரட்சிப்பிற்குள் வழிநடத்தினதுபோல உங்களுக்குள்ளும் சிலரை இரட்சிப்பிற்குள் வழிநடத்துவதற்காக, உங்களிடம் வருவதற்காக பலமுறை நான் யோசனையாக இருந்தேன், ஆனாலும் இதுவரைக்கும் எனக்குத் தடை உண்டானது என்று நீங்கள் அறியாமல் இருக்க எனக்கு மனமில்லை. Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 பிரியமானவர்களே, யூதரல்லாத மக்களின் மத்தியில் நான் அறுவடை செய்ததுபோலவே, உங்கள் மத்தியிலும் அறுவடை செய்யும்படி, நான் உங்களிடத்தில் வருவதற்குப் பலமுறை திட்டமிட்டேன்; ஆனாலும் இதுவரைக்கும் வரமுடியாதபடி தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதை நீங்கள் அறியாதிருப்பதை நான் விரும்பவில்லை. Sien die hoofstukபரிசுத்த பைபிள்13 சகோதர, சகோதரிகளே, உங்களிடம் வருவதற்காக நான் பலமுறை திட்டமிட்டேன். ஆனால் இப்போதுவரை நான் வரத் தடைசெய்யப்பட்டேன். நீங்கள் ஆத்தும வளர்ச்சியைப் பெறுவதற்காக நான் அங்கே வர விரும்புகிறேன். யூதர் அல்லாத மக்களுக்கு நான் உதவியது போலவே நான் உங்களுக்கும் உதவ விரும்புகிறேன். Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 சகோதரரே, புறஜாதிகளான மற்றவர்களுக்குள்ளே நான் பலனை அடைந்ததுபோல உங்களுக்குள்ளும் சில பலனை அடையும்படிக்கு, உங்களிடத்தில் வர பலமுறை யோசனையாயிருந்தேன், ஆயினும் இதுவரைக்கும் எனக்குத் தடையுண்டாயிற்று என்று நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை. Sien die hoofstuk |