லேவியராகமம் 13:51 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202251 ஏழாம்நாளில் அவன் அதைப் பரிசோதிக்க வேண்டும். உடையிலோ, நெய்யப்பட்ட துணியிலோ, தோலினால் செய்யப்பட்ட பொருட்களிலோ, தோலிலோ அவை எதற்கு பயன்படுத்தப்பட்டாலும் அவற்றில் பூஞ்சணம் படர்ந்திருந்தால், அது அழிவை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சணமாகும். அப்பொருள் அசுத்தமானது. Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்51 ஏழாம் நாளிலே அதைப் பார்க்கக்கடவன்; உடையிலாவது, நெய்யப்பட்ட, பின்னப்பட்ட பொருட்களிலாவது, தோலிலாவது, தோலினால் செய்யப்பட்ட எந்தவித பொருளிலாவது அது பரவியிருந்தால், அது அரிக்கிற தொழுநோய்; அது தீட்டாயிருக்கும். Sien die hoofstukபரிசுத்த பைபிள்51 ஏழாம் நாள் ஆசாரியன் அவனைச் சோதித்துப் பார்க்க வேண்டும். ஆடையிலாவது பாவிலாவது, தோல் துண்டிலாவது, தோலால் ஆன ஆடையிலாவது அது அதிகப்பட்டிருந்தால் அது அரிக்கிற தொழுநோய் என்று கருதலாம். அது தீட்டு உள்ளது. Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)51 ஏழாம் நாளிலே அதைப் பார்க்கக்கடவன்; வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது அது அதிகப்பட்டிருந்தால், அது அரிக்கிற குஷ்டம்; அது தீட்டாயிருக்கும். Sien die hoofstuk |