எரேமியா 11:20 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 சேனைகளின் யெகோவாவே, இருதயத்தையும், மனதையும் நீதியாய் நியாயம் தீர்த்து சோதித்தறிகிறவரே! அவர்கள்மேல் உமது பழிவாங்குதல் வருவதை நான் காணவேண்டும். ஏனெனில் என் வழக்கை நானே உம்மிடம் ஒப்புவித்துவிட்டேன். Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 சேனைகளின் யெகோவாவே, உள்ளத்தின் எண்ணங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே, நீர் அவர்களுக்கு நீதி செய்கிறதைப் பார்ப்பேனாக; என் வழக்கை உமக்கு வெளிப்படுத்திவிட்டேன் என்றேன். Sien die hoofstukபரிசுத்த பைபிள்20 ஆனால் கர்த்தாவே! நீர் நியாயமான நீதிபதி, மனிதர்களின் மனதையும், இதயத்தையும், எப்படி சோதிக்க வேண்டும் என்பதை அறிவீர். என்னுடைய வாதங்களை நான் உமக்குச் சொல்வேன். நான் அவர்களுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுக்கும்படி உம்மை அனுமதிப்பேன். Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 சேனைகளின் கர்த்தாவே, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைப் பார்ப்பேனாக; என் வழக்கை உமக்கு வெளிப்படுத்திவிட்டேன் என்றேன். Sien die hoofstuk |