1 தெச 2:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 பிரியமானவர்களே, கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிற யூதேயாவிலுள்ள இறைவனுடைய திருச்சபைகளை நீங்கள் பின்பற்றினீர்கள்: அந்தத் திருச்சபைகள் யூதர்களால் துன்பப்பட்டதுபோலவே, நீங்களும் உங்கள் நாட்டு மக்களால் துன்பப்பட்டீர்கள். Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 எப்படியென்றால், சகோதரர்களே, யூதேயா நாட்டில் கிறிஸ்து இயேசுவிற்குள்ளான தேவனுடைய சபைகளை நீங்கள் பின்பற்றினவர்களாகி, அவர்கள் யூதர்களாலே எப்படிப் பாடுகள்பட்டார்களோ, அப்படியே நீங்களும் உங்களுடைய சொந்த மக்களாலே பாடுகள்பட்டீர்கள். Sien die hoofstukபரிசுத்த பைபிள்14 சகோதர சகோதரிகளே! நீங்கள் யூதேயாவில் உள்ள கிறிஸ்துவுக்குள் இருக்கும் சபைகளைப் போன்றிருக்கிறீர்கள். யூதேயாவில் உள்ள தேவனுடைய மக்கள் மற்ற யூதர்களால் மிகவும் துன்புறுத்தப்பட்டார்கள். நீங்களும் உங்கள் சொந்த நாட்டு மக்களால் அதேவிதமாக துன்புறுத்தப்பட்டீர்கள் Sien die hoofstukஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 பிரியமானவர்களே, யூதேயாவில் உள்ள கிறிஸ்து இயேசுவில் இணைந்திருக்கும் இறைவனுடைய திருச்சபைகள் செய்ததையே நீங்களும் பின்பற்றி நடந்துகொண்டீர்கள். அந்தத் திருச்சபைகள் யூதர்களால் துன்பப்பட்டது போலவே நீங்களும் உங்கள் சொந்த மக்களால் துன்பப்பட்டீர்கள். Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 எப்படியெனில், சகோதரரே, யூதேயாதேசத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான தேவனுடைய சபைகளை நீங்கள் பின்பற்றினவர்களாகி, அவர்கள் யூதராலே எப்படிப் பாடுபட்டார்களோ, அப்படியே நீங்களும் உங்கள் சுய ஜனங்களாலே பாடுபட்டீர்கள். Sien die hoofstuk |