புலம்பல் 1:3 - பரிசுத்த பைபிள்3 யூதா மிகவும் துன்புற்றது. பிறகு, யூதா சிறையெடுக்கப்பட்டது. யூதா மற்ற நாடுகளுக்கு மத்தியில் வாழ்கிறது. ஆனால், அவள் ஓய்வைப் பெற்றிருக்கவில்லை. ஜனங்கள் அவளைத் துரத்திப் பிடித்தார்கள். அவர்கள் அவளைக் குறுகலான பள்ளத்தாக்குகளில் பிடித்தனர். Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 யூதா மக்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமை வேலைசெய்யவும் சிறைப்பட்டுப்போனார்கள். அவள் அந்நிய மக்களுக்குள்ளே தங்குகிறாள், இளைப்பாறுதல் அடையமாட்டாள்; அவளைத் துன்பப்படுத்துகிற அனைவரும் அவளை அவளுடைய இக்கட்டான நேரங்களிலே தொடர்ந்துபிடித்தார்கள். Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 துன்பத்தையும், கொடுமையான அடிமை வேலையையும் அனுபவித்தபின், யூதா நாடுகடத்தப்பட்டுப் போனாள். பிறநாடுகளின் மத்தியில் அவள் குடியிருக்கிறாள்; ஆனால் அவளுக்கோ இளைப்பாறும் இடம் இல்லை. அவளுடைய துன்பத்தின் மத்தியில் அவளைப் பின்தொடர்ந்த யாவரும் அவளைப் பிடித்துக்கொண்டார்கள். Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 யூதா ஜனங்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமைவேலைசெய்யவும் சிறைப்பட்டுப்போனார்கள். அவள் புறஜாதிகளுக்குள்ளே தங்குகிறாள், இளைப்பாறுதல் அடையாள்; அவளைத் துன்பப்படுத்துகிற யாவரும் அவளை இடுக்கமான இடங்களிலே தொடர்ந்துபிடித்தார்கள். Sien die hoofstuk |